மிக பெரிய வரலாற்று பிழை.. வைக்காதீர்கள் எங்களுக்கு உலை… வருத்தத்தில் நாராயணசாமி

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் மிக பெரிய வரலாற்று பிழை செய்துவிட்டதாக முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி :

புதுச்சேரியில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் அடுத்தடுத்து 4 பேர் ராஜினாமா செய்ததால் ஆளும் காங்கிரஸ் அரசு பெரும்பான்மை இழந்துள்ளது. மேலும், தற்போது ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் தலா 14 எண்ணிக்கையில் சமபலத்துடன் இருப்பதால் எந்த நேரத்திலும் ஆட்சிக்கு ஆபத்து ஏற்படும் சூழலும் நிலவி வருகிறது.

ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக என்.ஆர். காங்கிரஸ் ரங்கசாமி, பா.ஜ.க மாநில தலைவர் சாமிநாதன், அ.தி.மு.க அன்பழகன் உள்ளிட்டோர் புதுச்சேரி அரசுக்கு பெரும்பான்மை இல்லை. சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று மனு அளித்தனர்.

இந்தநிலையில், நேற்று புதிதாக புதுச்சேரியில் துணை நிலை ஆளுநராக பதவி ஏற்ற தமிழிசை சௌந்தரராஜன் ஆளும் காங்கிரஸ் கட்சி வருகின்ற பிப்.22ம் தேதி பெரும்பான்மையை நிரூபிக்குமாறு புதுச்சேரி முதல்வர் நாராயணசாமிக்கு உத்தரவு பிறப்பித்தார். பெரும்பான்மையை நிரூபிப்பது குறித்து அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் முன்னிலையில் முதல்வர் நாராயணசாமி நேற்று ஆலோசனை கூட்டத்தையும் நடத்தினார்.

Read more – வேல் யாத்திரை தொடந்து நடக்க.. பா.ஜ.க வெற்றியுடன் கோட்டையில் இடத்தை பிடிக்க… மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு

இந்தநிலையில், பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் அளித்த கடிதத்தில் நியமன உறுப்பினர்கள் பாஜக என்று குறிப்பிட்டுள்ளார். நியமன உறுப்பினர்களை பாஜகவினர் என்று சபாநாயகர் ஏற்கனவே அங்கீகரிக்கவில்லை. எனவே, ஆளுநர் அளித்த கடிதத்தில் மிகப்பெரிய தவறு உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

Exit mobile version