ஒரே காரில் பேசிக்கொண்டே சென்ற முதல்வர், துணை முதல்வர்

முதல்வரும், துணை முதல்வரும் தூத்துக்குடியில் இருந்து திருநெல்வேலிக்கு ஒரே காரில் பயணம் செய்தனர்.

முன்னாள் சபாநாயகர் பி.ஹெச்.பாண்டியன் மனிமண்டபத் திறப்பு விழா சேரன்மகாதேவி அருகே உள்ள கோவிந்தப்பேரி கிராமத்தில் இன்று (ஜனவரி 4) நடைபெற்றது. நிகழ்வில் கலந்துகொள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் சென்னையில் இருந்து விமானம் மூலமாக தூத்துகுடி வந்தனர். அங்கு அவர்களுக்கு அமைச்சர் கடம்பூர் ராஜு உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர்.


அதன்பிறகு இருவரும் ஒரே காரில் பின்புற சீட்டில் அமர்ந்துகொண்டு திருநெல்வேலிக்கு பேசிக்கொண்டே பயணம் செய்தனர். திருநெல்வேலியில் சுமார் 2 கி.மீ. தொலைவுக்கு அவர்களை பொதுமக்கள் திரண்டு நின்று வரவேற்றனர் திறந்த ஜீப்பில் முதல்வரும், துணை முதல்வரும் சென்று பொதுமக்கள் வரவேற்பை ஏற்றனர்.


முதல்வர் வேட்பாளர் பிரச்சினையை முன்வைத்து பழனிசாமி, பன்னீர்செல்வம் இருவருக்கும் இடையே கடந்த செப்டம்பர் மாதம் மோதல் ஏற்பட்டது. அதன்பிறகு பழனிசாமி முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதால் பன்னீர்செல்வம் அதிருப்தியில் இருந்ததாக கூறப்பட்டது. பன்னீர்செல்வம் அதிமுகவிலிருந்து கழண்டு விடுவார் என ஸ்டாலின் கூறியிருந்தார். தங்களுக்குள் எந்த பிரச்சினையும் இல்லை என்பதை காட்டும் விதமாகவே இருவரும் ஒன்றாக ஒரே காரில் பயணித்துள்ளனர்.

read more:

தொடர்ந்து,  கோவிந்தப்பேரி கிராமத்தில் நடைபெற்ற நிகழ்வில், மணிமண்டபத்தை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், பி.ஹெச்.பாண்டியன் சிலையை முதல்வர் பழனிசாமியும் திறந்து வைத்தனர்

Exit mobile version