ராயப்பேட்டையில் முன்னாள் காங்கிரஸ் எம்பி.க்கு சொந்தமான 5 மாடி கட்டிடம் நேற்று இரவு 8 மணியளவில் இடிந்து விழுந்தது. இதில் எவ்வித உயிர்சேதமும் ஏற்படவில்லை.
சென்னை ராயப்பேட்டை, பீட்டர்ஸ் சாலையில் உள்ள புதுக்கல்லூரிக்கு எதிரே பழைய 5 மாடி கட்டிடம் ஒன்று உள்ளது. இந்த கட்டிடமானது சென்னையை சேர்ந்த ஒருவரின் பூர்வீக சொத்தாகும். மேலும் இந்த கட்டிடத்தின் தரை தளத்தில் பல கடைகள் கட்டி வாடகைக்கு விடப்பட்டிருந்தன. 1977ம் ஆண்டு முதல் 1982ம் ஆண்டு வரை வாடகைக்கு இருந்தவர்கள் ஓய்ந்தனர் அவர்களின் ஒப்பந்தம் தீர்ந்ததும் அவர்களை காலி செய்ய சொல்லும்போது அவர்கள் மறுத்ததால் பின்னர் அந்த தளத்தின் மீது 5 அடுக்கு மாடி கட்டி வாடகைக்கு விடபட்டது.
இதனிடையே, இந்த வீட்டை கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு, காங்கிரஸ் முன்னாள் எம்பி. ஜே.எம். ஆரூணின் மகள் வாங்கியுள்ளார். அதனை தொடர்ந்து அவர் அந்த கட்டிடத்தை இடித்து விட்டு புதிய வீடு காட்ட தீர்மானித்து அந்த கட்டிடத்தில் உள்ள அனைவரையும் காலி செய்ய சொன்னார். அதற்கு அங்கிருடன்ஹா அனைவரும் நஷ்டஈடு கேட்டுள்ளனர். அவர் கொடுத்த நஷ்ட ஈட்டை பெற்று கொண்டு 12 குடும்பங்கள் காலி செய்து விட்டன. ரெஜினா பேகம் என்ற பெண்மணி மட்டும் வீட்டை காலி செய்யாமல், ரூ.1 கோடி வரை இம்ரானிடம் இருந்து தனது வக்கீல்கள் மூலமாக நஷ்ட ஈடு கேட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக இந்த 5 மாடி கட்டிடம் நேற்று இரவு 8 மணியளவில் திடீரென இடிந்து விழுந்தது. அதிஷ்ட வசமாக ரெஜினா பேகம் ஒரு மணி நேரத்துக்கு முன்பு அவர் வெளிய சென்றதால் உயிர் சேதம் இல்லாமல் தப்பித்தார். மேலும் அவர்களின் நகைகள் மட்டும் முக்கிய ஆவணங்கள் உள்ளே மாட்டிக்கொண்டு இருப்பதாக கூறி இருக்கின்றார்.
கட்டிடம் இடிந்து விழுந்ததில், கீழே நிறுத்தப்பட்டிருந்த 2 வேன்கள், காங்கிரஸ் முன்னாள் எம்பி. ஜே.எம். ஆரூணின் 2வது மகன் இம்ரானுக்கு சொந்தமான 1 சரக்கு வேன் சேதமடைந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த திருவல்லிக்கேணி, மைலாப்பூர், எஸ்பிளனேடு, தேனாம்பேட்டையை சேர்ந்த 4 தீயணைப்பு வாகனங்களில் வந்த மீட்பு படையினர் கட்டிட இடிபாடுகளை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.