கடலில் குதிப்பதும், மாணவிகள் முன்பு தண்டால் எடுப்பதும் தலைவருக்கு அழகா ? ராகுலை கிண்டலடித்த குஷ்பூ

காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தியின் செயல்பாடுகள் நல்ல தலைவருக்கு அழகல்ல என்று நடிகை குஷ்பூ தெரிவித்துள்ளார்.

சென்னை :

தமிழகம், கேரளா, புதுவை மாநிலங்கள் உள்பட 5 மாநில தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தமிழகத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். இந்தநிலையில் மீனவ மக்களோடு மக்களாக களமிறங்கி கடலில் மீன் பிடித்தார்.

அதனைத்தொடர்ந்து, பள்ளி மாணவர் ஒருவரிடம் ‘Aikido’ தற்காப்புக்கலையை ராகுல் காந்தி செய்தும் பள்ளி மாணவி ஒருவர் 15 புஷ் அப்களை எடுக்க முடியுமா என்ற சவால் விடுத்த நிலையில், அந்த மேடையிலேயே சில நொடிகளுக்குள் 15 புஷ் அப்களை செய்து அசத்தினார்.

Read more – சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க வெற்றி பெறும் அருமையாய்.. அதற்கு காத்திருங்கள் பொறுமையாய்… நடிகை கௌதமி பேட்டி

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள நடிகை குஷ்பூ கூறியதாவது, பரப்புரையின்போது மீனவர்களுடன் கடலில் குதித்தது உள்ளிட்ட காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தியின் செயல்பாடுகள் நல்ல தலைவருக்கு அழகல்ல என்று தெரிவித்துள்ளார். ஏற்கனவே குஷ்பூ காங்கிரஸ் கட்சியில் இருந்துள்ளார் என்பதும் அதன்பிறகு தற்போது பா.ஜ.கவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version