சேலம் அண்ணா பூங்கா அருகே அமைந்துள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் முழு உருவ வெண்கல சிலை மீது மர்ம நபர்கள் தார் ஊற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி 2023 ஆம் ஆண்டு 1817 சதுர அடி பரப்பளவில் 20 அடி உயரத்தில் (4 அடி பீடம் 16 அடி சிலை) அமைக்கப்பட்ட இந்த சிலையை 11.06.2023 அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பங்கேற்று திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கருணாநிதி உருவச் சிலை மீது தார் ஊற்றப்பட்ட நிலையில் அஸ்தம்பட்டி உதவி ஆணையாளர் அஸ்வினி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.