ஜெயலலிதா எங்கள் ஒளியே.. முதல்வர் பழனிசாமி அவரின் வழியே.. ஓ.பி.எஸ் புகழாரம்

ஜெயலலிதா வழியில் அடிபிறழாமல் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆட்சி செய்து வருகிறார் என்று துணை முதல்வர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

கோவை :

அதிமுகவின் சார்பில் கோவை பேரூரில் 123 ஜோடிகளுக்கு இலவச திருமணத்தை செய்து வைத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் கலந்து கொண்டு அந்த ஜோடிகளை ஆசீர்வதித்து பேசியதாவது ;

“ஒரு கட்சி எப்படி செயல்பட வேண்டும் என்று நிரூபித்து வாழ்ந்து காட்டியவர் ஜெயலலிதா. ஜெயலலிதா வழியில் அடிபிறழாமல் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆட்சி செய்து வருகிறார். வரும் மே மாதம் நடைபெற உள்ள சட்டமன்றத்தேர்தலில் வெற்றி பெற்று ஜெயலலிதாவுக்கு நன்றிக்கடன் செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

Read more – அதிமுக கட்சி ஒருநாள் சசிகலா கைகளில் சேரும்… சசிகலா மதிப்பு தேர்தலுக்கு பிறகு ஏறும்.. கார்த்திக் சிதம்பரம் அதிரடி

அதனைத்தொடர்ந்து பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சாதி, மதத்திற்கு அப்பாற்பட்டது அதிமுக. நமக்கு சாதி மத பேதமில்லை. ஆனால் இதைவைத்து அரசியல் செய்யும் திமுக கட்சி தொடர்ந்து காற்றில் பறக்கவிடும் அறிவிப்புகளை மட்டுமே வெளியிட்டு வருகிறது என்று குற்றம் சாட்டினார்.

Exit mobile version