திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு எத்தனை சீட்: மூத்த தலைவர் விளக்கம்!

திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு எத்தனை இடங்கள் என்பது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் ஐயர் கருத்து கூறியுள்ளார்.

திமுக கூட்டணியில் இருந்து மக்களவைத் தேர்தலை எதிர்கொண்ட காங்கிரஸ் கட்சி, தேனியைத் தவிர போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் வென்றது. பிகார் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தோற்றதன் விளைவாக குறைந்த இடங்களே அக்கட்சிக்கு தமிழகத்தில் அளிக்க வேண்டும் என திமுக நிர்வாகிகள் கருத்து தெரிவித்தனர். ஆனால், தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் நாங்கள் வெற்றிபெற்றுள்ளோம். அதைவைத்துதான் தொகுதிப் பங்கீடை பார்க்க வேண்டுமென கே.எஸ்.அழகிரி பதிலளித்தார்.


என்றாலும் தொகுதிப் பங்கீட்டில் தேவையற்ற பேரங்கள் எதுவும் இருக்காது எனவும், ஸ்டாலினை முதல்வராக்குவதே தங்களுடைய இலக்கி என்றும் தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ் அறிவித்தார். இந்த நிலையில் சட்டமன்றத் தேர்தலுக்கு தயாராகும் வகையில் 32 மாநில துணைத் தலைவர்கள், 54 பொதுச் செயலாளர்கள், 107 செயலாளர்களை நியமித்துள்ளது தமிழக காங்கிரஸ். அத்துடன், தேர்தல் பணிக்குழுவுக்கும் பொறுப்பாளர்கள் நியமிக்கபப்ட்டனர்.

தேர்தல் அறிக்கைக் குழுவில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் ஐயர் அளித்த பேட்டில், சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸுக்கு எவ்வளவு இடங்கள் என்பதை ஸ்டாலின்தான் முடிவு செய்வார். எங்களுக்கு வழங்கப்படுவதை நாங்கள் முழுமனதோடு ஏற்றுக்கொள்வோம் என்றார்.

read ,more: அதிமுக பொதுக் குழுவில் சசிகலா குறித்த விவாதமா? அமைச்சர் மறுப்பு!


மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸுக்கு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை பேச்சுவார்த்தையில் முன்வைப்போம் என்று தெரிவித்த அவர், “திமுக அங்கு ஒருமுறை கூட வெற்றி பெற்றதில்லை. ஆனால், முன்னதாக காங்கிரஸ் வெற்றி வேட்பாளர் அங்கு இருந்தார். எண்ணிக்கையில் மாற்றம் இருக்க வாய்ப்பில்லை, ஆனால், ஒரு சில இடங்களில் மாற்றம் இருக்கும் எனக் கூறினார்.

Exit mobile version