திமுக கூட்டணி கட்சிகளின் கூட்டம்.. விவசாய மசோதாக்கள் மீது முக்கிய ஆலோசனை

வரும் 21ம் தேதி திமுக தோழமை கட்சிகள் கூட்டம் நடைபெறும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

வரும் 21ம் தேதி திமுக தோழமை கட்சிகள் கூட்டம் நடைபெறும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

விவசாய பொருட்களின் உற்பத்தி தொடர்பான 3 மசோதாக்களை, தற்போது நடைபெற்று வரும் மழைக்கால கூட்டத் தொடரில் நாடாளுமன்றத்தில் மத்திய அரசு அறிமுகம் செய்தது. இந்த மசோதாக்கள் விவசாயிகளுக்கு பாதகமாக உள்ளதாகவும், கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு ஆதரவாக இருப்பதாகவும், பதுக்கல் உள்ளிட்ட முறைகேடுகளுக்கு வழிவகுக்கும் என்றும் திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தன. ஆனாலும், நாடாளுமன்றத்தில் பாஜக தலைமையிலான மத்திய அரசு பெற்றுள்ளள்ள, தனிப்பெரும்பான்மையால் 3 மசோதாக்களும் நிறைவேற்றியுள்ளது.

இந்த மசோதக்கள் தொடர்பாக ஆலோசிக்க, திமுக கூட்டணி கட்சி கூட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி நாளை மறுநாள் காலை 10.30 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

Exit mobile version