தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை நடக்கிறது-துரைமுருகன் அறிவிப்பு

தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை நடைபெற உள்ளது என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக, தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் இன்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை வியாழக்கிழமை காலை 10.30 மணி அளவில், காணொலிக் காட்சி வாயிலாக நடைபெறும். அப்போது, மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு துரைமுருகன் அறிவித்துள்ளார்.
இந்த கூட்டத்தில் டெல்லியில் நடைபெறும் விவசாயிகளின் போராட்டம் குறித்து ஆலோசிக்கப்படும் என, அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி போராட்டம்
மத்திய அரசு புதியதாக நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த சட்டங்களை திரும்ப பெறவேண்டும் என்று டெல்லியில் கடந்த சில தினங்களாக லட்சக்கணக்கான விவசாயிகள் போராடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version