தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு 3ம் கை்ை சுற்றுப்பயண தேதிகளை அக்கட்சியின் தலைமை கழகம் அறிவித்துள்ளது.

தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு 3ம் கை்ை சுற்றுப்பயண தேதிகளை அக்கட்சியின் தலைமை கழகம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக, தி.மு.க. தலைமை கழகம் இன்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு
2021-ல் நடைபெற உள்ள தமிழக சட்டப்பேரவைப் பொதுத் தேர்தலையொட்டி தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஒருங்கிணைப்பாளர் டி.ஆர்.பாலு தலைமையிலான குழுவினரிடம் தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய பொது அம்சங்கள் மற்றும் தங்கள் மாவட்டங்களைச் சார்ந்த பொதுநலச் சங்கங்கள் – வணிக அமைப்புகள் – இளைஞர்கள் – விவசாய அமைப்புகள் – தொழிலாளர் அமைப்புகள் – தோழமை இயக்கத்தினர் மற்றும் பொதுமக்களின் நலன் விழையும் அமைப்புகளுக்கும் உரிய முறையில் அழைப்புகள் அளித்து, அந்தந்த பகுதிகளில், அந்த அமைப்புகளின் நிர்வாகிகள் – உறுப்பினர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்தும், அந்த துறைகளில் உள்ள பொதுவான பிரச்சினைகள் குறித்தும், அதற்கான தீர்வுகள் குறித்தும் நேரில் தெரிவிக்க கீழே அட்டவணையில் குறிப்பிட்டுள்ள தேதிகளில் தங்கள் கோரிக்கைகளை தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினரிடம் வழங்கிட வேண்டும்.
3ம் கட்ட சுற்றுப்பயணம்
தி.மு .க. தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு 3-ம் கட்ட சுற்றுப்பயண விவரம்:
டிசம்பர்-4 மாலை 4.00 மணி – கடலூர் கிழக்கு கடலூர் மேற்கு, டிசம்பர்-5 காலை 9.00 மணி – நாகை வடக்கு நாகை தெற்கு மாலை 4.00 மணி – திருவாரூர், டிசம்பர்-6 காலை 9.00 மணி – தஞ்சை வடக்கு தஞ்சை மத்திய தஞ்சை தெற்கு மாலை 4.00 மணி – புதுக்கோட்டை வடக்கு புதுக்கோட்டை தெற்கு டிசம்பர்-7 காலை 9.00 மணி – திருச்சி வடக்கு திருச்சி தெற்கு திருச்சி மத்தி. மாலை 4.00 மணி – அரியலூர் பெரம்பலூர்
நேரம்
காலை நிகழ்ச்சிகள் அனைத்தும் சரியாக 9 மணிக்கும், மாலை நிகழ்ச்சிகள் அனைத்தும் சரியாக 4 மணிக்கும் தொடங்கப்படும்.
மேற்கண்டவாறு, மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் கட்சி தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவின் சுற்றுப்பயண விவரத்தையும் – கோரிக்கை மனுக்கள் பெறும் இடத்தையும் விளம்பரம் செய்திட வேண்டும் என மாவட்டச் செயலாளர்/ பொறுப்பாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.