உரிமைகள் பறிக்கப்படுவதை வேடிக்கை பார்ப்பதா? – ஸ்டாலின் முதலமைச்சருக்கு கடிதம்

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர வேண்டும் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர வேண்டும் என முதலமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அதில், கூறியிருப்பதாவது:-
வேளாண் சட்டங்கள்
விலை உறுதி அளிப்பு மற்றும் பண்ணை ஒப்பந்தத்திற்கான விவசாயிகள் சட்டம் 2020, விவசாய விளைபொருட்கள் மற்றும் வர்த்தகம் சட்டம் 2020, அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம் ஆகிய மூன்று சட்டங்களையும் நாடாளுமன்றம் இயற்றியிருப்பது நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை உருவாக்கி இருக்கிறது. காலம் காலமாக தரகர்களிடம் இருந்து காப்பாற்றி விவசாயிகளின் விளைபொருளுக்கு நியாயமான விலை கிடைப்பதை மாநில அரசுதான் பூர்த்தி செய்து வருகிறது.
வேடிக்கை பார்க்கக்கூடாது
வேளாண்மை தொடர்பான சட்டங்களை நிறைவேற்றும் முழு அதிகாரமும் மாநில அரசுக்கே இருக்கிறது. அதேபோல நிலம், நிலம் சார்ந்த சுவாதின உடன்படிக்கை ஆகியவை மாநிலப் பட்டியலில் இருக்கிறது. ஆகவே இந்த அதிகாரத்திற்குள் நுழைந்து மத்திய அரசு சட்டம் இயற்றி இருப்பதை நாம் வேடிக்கை பார்க்க முடியாது.
வழக்குத் தொடர்க
எனவே தமிழ்நாடு அரசு சட்டப்பேரவையில் இந்த இரண்டு வேளாண் சட்டங்களுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றிட வேண்டும்.
விவசாயிகளுக்கு பாதிப்பினை ஏற்படுத்தும் மூன்று சட்டங்களுக்கு எதிராக தமிழக அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர வேண்டும். இவ்வாறு அதில் எழுதப்பட்டுள்ளது.

இந்த கடிதத்தை தி.மு.க. எம்.எல்.ஏக்கள் தலைமைச் செயலகத்தில் முதல்வர் அலுவலகத்தில் நேரில் வழங்கினர்.

Exit mobile version