ஆளுநர் உரையை புறக்கணித்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

தமிழக ஆளுநர் பன்வாரிலாலை உரையை புறக்கணித்து தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.

2021-ம் ஆண்டின் தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் இன்று தொடங்கியது.  ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் ஆளுநர் உரையுடன் கூட்டம் தொடங்கியது. அவை கூடியதும் ஆளுநரை உரையாற்ற விடாமல் எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். அப்போது எதிர்க்கட்சிகள் வைக்கும் கோரிக்கைகள் குறித்து பிறகு விவாதிக்கலாம் என்றும் கூட்டத்தொடருக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் ஆளுநர் வேண்டுகோள் விடுத்தார். ஆனால் அதை ஏற்காமல்              ஆளுநர் உரையை புறக்கணித்து தி.மு.க, காங்கிரஸ், ஐயூஎம்எல் உள்ளிட்ட கட்சியினர் வெளிநடப்பு செய்தனர். ஆளுநர் உரை மீதான சட்டமன்ற கூட்டத்தொடர் முழுவதும் எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு செய்யும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து இருக்கிறார்.

Exit mobile version