அதிமுக எதிர்க்கட்சியாகக் கூட வர முடியாது: ஸ்டாலின் பேச்சு

எப்படிப்பட்ட பிரச்சாரங்களை மேற்கொண்டாலும் அதிமுகவால் எதிர்க்கட்சியாகக் கூட வர முடியாது என ஸ்டாலின் பேசியுள்ளார்.

சென்னை தேமுதிக வடக்கு மாவட்ட செயலாளர் பா.மதிவாணன் அண்மையில் திமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார். இதன் தொடர்ச்சியாக அப்பகுதியைச் சேர்ந்தவர்களும் தங்களை தி.மு.கவில் இணைத்துக்கொண்டனர். சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் தேமுதிகவினர் அக்கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணையும் நிகழ்வு நடைபெற்றது.


நிகழ்வில் திமுகவில் இணைந்தவர்களை வரவேற்றுப் பேசிய ஸ்டாலின், இன்னும் 4 மாதங்களில் தேர்தல் வரவுள்ளது. அதில், நான் எதிர்பார்ப்பதை விட, இந்த மேடையில் நாங்கள் எதிர்பார்ப்பதை விட, நீங்கள் எதிர்பார்ப்பதை விட ஒட்டு மொத்த தமிழகமும் திமுக ஆட்சிக்கு வர வேண்டும் என்று எதிர்பார்த்து வருகின்றனர் என்று கூறினார்.


மக்களை ஏமாற்ற வேண்டும் என்று அரசு பணத்தில் பொய்யான விளம்பரங்களை அதிமுக செய்து வருகின்றன எனவும் அது மக்களின் வரிப் பணம். என்ன தான் தவறான பிரச்சாரங்களை செய்தாலும் தமிழகத்தில் அதிமுக எதிர் கட்சியாக கூட வர முடியாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்த ஸ்டாலின்,

read more: எம்.ஜி.ஆர் பலரது இதயங்களில் வாழ்கிறார்: பிரதமர் புகழாரம்!

சில தினங்களுக்கு முன்பு நான் 200 சீட்களுக்கு மேல் திமுக வெற்றி பெற வேண்டும் என்று தெரிவித்திருந்தேன். மக்கள் கிராம சபை கூட்டங்கள் மூலம் கிடைக்கும் மக்கள் ஆதரவு மூலம் பார்த்தால் 234 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும் நிலையில் உள்ளதாக நம்பிக்கைத் தெரிவித்தார்.

Exit mobile version