அவதூறு வழக்குகளில் நேரில் ஆஜராக வேண்டும் என முதலமைச்சரை நிர்ப்பந்திக்கக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியில் போடப்பட்ட அவதூறு வழக்குகளை ரத்து செய்யக் கோரி தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க ஸ்டாலின் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். கடந்த அதிமுக ஆட்சியில் 17 அவதூறு வழக்குகள் மு.க.ஸ்டாலின் மீது போடப்பட்டுள்ளது. இந்நிலையில், எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு நேரில் ஆஜராக வேண்டும் என முதலமைச்சரை நிர்ப்பந்திக்கக் கூடாது உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தொடர்ந்து, வழக்குகளின் விவரங்களை அட்டவணையாக தாக்கல் செய்ய அரசு தரப்புக்கு நீதிபதி நிர்மல்குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார். தன் மீது போடப்பட்ட வழக்குகளை ரத்து செய்யக் கோரும் முதல்வரின் மனுக்கள் மீது ஆகஸ்ட் 8-ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.