சசிகலாவின் விடுதலை தொடர்பாக பாஜக வினரை சந்திக்க டிடிவி தினகரன் டெல்லி சென்றுள்ளார்.
புதுடெல்லி:
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா சொத்து குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹார மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இன்று வரை சசிகலா சிறை தண்டனை அனுபவித்து வரும் நிலையில் வருகின்ற அடுத்த வருடம் ஜனவரி மாதம் 27 ம் தேதி விடுதலை செய்யப்பட உள்ளார்.
இந்த நிலையில், சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் சுதந்திரமாக நடமாட இரண்டு கோடி லஞ்சம் கொடுத்ததாக சிறப்பு டிஐஜி ரூபா மேலதிகாரிகளுக்கு புகார் அளித்திருந்தார். இது தொடர்பாக வினய் குமார் தலைமையில் குழு அமைக்கப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அந்த அறிக்கையில் சசிகலா சார்பில் லஞ்சம் வழங்கியதாவும், மேலும் லஞ்சம் கொடுத்தது யார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read more – ஜனவரி 11 ம் தேதி இலங்கை துணைத்தூரகம் முற்றுகையிடப்படும் : மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவிப்பு
நீதிமன்றம் மூலமாக சிறைத்துறை அதிகாரியிடம் வழக்கு கொடுத்துவிட்டால் இந்த வழக்கில் சசிகலாவை தொடர்ந்து சிறையிலேயே வைத்திருக்க முடியும். இதனால் சசிகலாவின் விடுதலை தடையாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.இதையடுத்து, சசிகலா விடுதலையடைய வேண்டும் என்பதற்காக பாஜக வினரை சந்திக்க டிடிவி தினகரன் டெல்லி சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.