பாஜக தலைவர் அண்ணாமலை திமுகவின் ஸ்லீப்பர் செல் என மதிமுகவின் முதன்மை செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார்.
மதிமுக சார்பில் இளையோர் தேர்தல் பயிலரங்கம் சென்னை எழும்பூரில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டனர். வரும் நாடாளுமன்றத் தேர்தலின் போது இளைஞர்கள் எப்படிச் செயல்பட வேண்டும் என்பது குறித்து கட்சியின் முதல்கட்ட நிர்வாகிகள் மூலமாக ஆலோசனை வழங்கப்படது.
மறுமலர்ச்சி திமுகவிற்கு புத்தெழுச்சியை ஏற்படுத்தும் நிகழ்வாக இந்த இளையோர் தேர்தல் பயிலரங்கம் இருப்பதாக மதிமுகவின் முதன்மை செயலாளர் துரை வைகோ தெரிவித்தார். மேலும் பாஜக தலைவர் அண்ணாமலை திமுகவின் ஸ்லீப்பர் செல் என்றும் பாஜக – அதிமுக கூட்டணியை உடைத்து எதிர் கட்சிகளின் வலிமை இழக்க செய்துவிட்டார் அதனால் தான் அவரை நான் திமுகவின் ஸ்லீப்பர் செல் என்று சொல்கிறேன் எனப் பேசிய போது இளைஞர் கூட்டம் ஆராவரித்தது.
நிகழ்வில் மதிமுகவின் மதுரை சட்டமன்ற உறுப்பினர் புதூர் பூமிநாதன் பேசும் போது, எந்த நோக்கத்திற்காக இந்த நிகழ்வு நடத்தப்பட்டதோ, அது 100% முழுமையாக நிறைவேறிவிட்டது என உணர்ச்சித் ததும்ப பேசி வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
மதிமுக பொருளாளர் மு.செந்திலதிபன் மற்றும் மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட பலர் நிகழ்வில் கலந்து கொண்டனர்.