வருமான வரித் துறைக்கு தகவல் சொல்கிறார்கள்: துரைமுருகன் காட்டம்!

திமுகவினர் யாரையும் போட்டுக்கொடுக்காமல் ஒற்றுமையுடன் பணியாற்ற வேண்டுமென திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவுறுத்தினார்.

 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக ஆலோசிக்க திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில், அக்கட்சியின் மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர் கழகச் செயலாளர்கள் கூட்டம் இன்று (டிசம்பர் 20) சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய ஸ்டாலின், . சிலரை கட்டாயபப்படுத்தி கட்சி தொடங்கச் செய்கிறார்கள் என ரஜினிகாந்தை மறைமுகமாக விமர்சித்தார். 200 தொகுதிகளுக்கு மேல் திமுக கூட்டணி வெற்றிபெற வேண்டுமென்றார். அமைச்சர்கள் அனைவரையும் தோற்கடிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

நாம்தான் வெற்றிபெறப் போகிறோம். ஆனால் அந்த வெற்றியை சாதாரணமாக அடைய நம்மை விடமாட்டார்கள். நாம் எந்த அளவுக்கு உழைக்கிறோமா அப்போதுதான் வெற்றியடைய முடியும் என்றும் உரையாற்றினார்.

read more: தமிழகத்திற்கு ரூ.‌4,813 கோடி கடன் வாங்க அனுமதி!


கூட்டத்தில் முன்னதாக பேசிய துரைமுருகன், எம்.ஜி.ஆர் யாரைக் காட்டினாலும் அவர் எம்.பி, எம்.எல்.ஏ என்ற நிலை இருந்தது. தமிழக அரசியலில் மகத்தான வல்லமை பெற்றிருந்த எம்.ஜி.ஆரையே, மக்களவைத் தேர்தலில் ஜீரோ வாங்க வைத்த பெருமை திமுகவைச் சேரும் என்று பெருமிதம் தெரிவித்தார்.


ஒருவருக்கொருவர் காட்டும் மனக் கசப்பு வேதனை அளிக்கிறது. பணம் கூட நமக்கு இரண்டாவதுதான். முதலில் நமக்குள் ஒற்றுமை தேவைப்படுகிறது. திமுகவில் உள்ள சிலர் வருமான வரித்துறைக்கு செய்தி சொல்லும் அளவுக்கு வன்நெஞ்சம் படைத்தவர்களாக இருக்கிறார்கள். ஆகவே, மனக்கசப்பு காட்டாமல் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தினார் துரைமுருகன்.

Exit mobile version