’’மாஸ்க் அணிந்ததால் ….சில வார்த்தைகள் தவறுதலாக வந்தது… நான் வருந்துகிறேன்’’ – துரைமுருகன்

கூட்டணி குறித்து தான் தெரிவித்த கருத்துக்கு வருத்தம் தெரிவித்த துரைமுருகன்.

கூட்டணி குறித்து தான் தெரிவித்த கருத்து எவருக்காவது வருத்தம் ஏற்பட்டால் அதற்குத் தான் வருந்துவதாக திமுக பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார்.

திமுகவின் நீண்டகாலம் பொதுச்செயலாளராக இருந்தவர்ஃப்  அன்பழகன்., இவர் சமீபத்தில் காலமானார்.

இதையடுத்து திமுக கட்சியின் பொதுச்செயலர் யார்? என்று  பலரும் கேள்வி எழுப்பிய நிலையில் திமுக பொருளாளராக இருந்த துரைமுருகன் பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

வரும் சட்டமன்றத் தேர்தலுக்கு, திமுக யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைக்கும். இப்போது எதையும் கூறமுடியாது…தேர்தல் காலத்தின் இறுதிக்காலத்தின் கூட கட்சிகள் இடம்மாறும் என்று தெரிவித்தார்.

இந்நிலையில், தான் பேசியதற்கு வருந்துவதாக துரைமுருகன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், மாஸ்க் அணிந்து பேசியதால் தவறாக வந்திருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

எங்கள் கூட்டணியில் உள்ளவர்கள் நான் கூறியதற்கு வருந்தியிருந்தால் அதற்உ நான் வருத்தப்படுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் பொதுச்செயலாளராக ஆனபின் தனது பேச்சு,நடவடிக்கைகள் மாற்றியுள்ளேன் என்று துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

Exit mobile version