கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து…

இந்திய அணிக்கு தேர்வாகியுள்ள கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

காயம் காரணமாக ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக விளையாட இருந்த இந்திய அணியில் இருந்து வருண் சக்கரவர்த்தி நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக ஆஸ்திரேலியவை எதிர்த்து விளையாடும் டி 20 போட்டிக்கு வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இந்த நடராஜ் என்னும் வேகப்பந்து வீச்சாளர் சேலம் சின்னம்பட்டியை சேர்ந்தவர். மேலும் இவர் நடுத்தரமான குடும்பத்தை சேர்ந்தவர். இவர் தற்போது நடந்து வரும் ஐபிஎல் தொடரில் சன்ரைஸ் அணிக்காக விளையாடிவருகிறார். துல்லியமான யார்க்கர், தரமான பந்துவீச்சு மூலம் இந்த ஐபிஎல் ஆட்டத்தில் அனைவரின் கவனத்தையும் கவர்ந்துள்ளார். டி-வில்லியர்ஸ், தோனி போன்ற சிறந்த ஆட்டக்காரர்களையும் இவர் தம் வேக பந்துகளால் திணற வைத்துள்ளார். இவர் தற்போது இந்திய அணியில் இடம்பெற்றுள்ளது ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளித்து வருகிறது.

இந்நிலையில் தமிழ முதலைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் இவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் கிரிக்கெட் உலகின் ஜாம்பவான்களை தமது அசாத்திய பந்துவீச்சால் திக்குமுக்காடச் செய்த நடராஜன், இந்திய அணிக்கு தேர்வாகியுள்ளது மிகுந்த மகிழ்ச்சியும், பெருமிதமும் அளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version