அஞ்சலக சிறுசேமிப்பு திட்டங்களில் பயன்பெற வேண்டும் என்று மக்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உலக சிக்கன நாள்
உலக சிக்கன நாள் நாளை கடைபிடிக்கப்பட உள்ளது. இதையடுத்து, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள உலக சிக்கன நாள் செய்தியில் கூறியிருப்பதாவது:-
மக்களிடையே சிக்கனம் மற்றும் சேமிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்திடும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 30-ம் நாள் உலக சிக்கன நாளாக கொண்டாடப்படுகிறது.
அஞ்சலக சேமிப்பு
மக்கள் தாங்கள் ஈட்டிய பணத்தை, அஞ்சலகச் சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம், சிறுகச் சிறுக சேமிக்கப்படும் அத்தொகை பன்மடங்காகப் பெருகி, எதிர்கால வாழ்க்கைக்கு பாதுகாப்பை அளிக்கும்.
இந்த உலக சிக்கன நாளில், தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் வாழ்வு வளம்பெற, அஞ்சலகங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் சிறுசேமிப்பு திட்டங்களில் சேர்ந்து பயன்பெற்றிட வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.