வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டம் தொடரும் என விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.
மூன்று வேளாண் சட்டங்கள், மின்சார சட்டத் திருத்தம் ஆகியவற்றை எதிர்த்து பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் 50 நாட்களுக்கும் மேலாக தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதொடர்பாக மத்திய அரசு மற்றும் விவசாய சங்கங்கள் இடையே நடந்த 10 கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது.
வேளாண் சட்டங்கள் தொடர்பான வழக்கில் பிரச்சினையை தீர்ப்பதற்காக உச்ச நீதிமன்றம் குழு ஒன்றை அமைத்துள்ளது. இதனிடையே குடியரசு தினத்தன்று டெல்லியில் டிராக்டர் பேரணி நடைபெறும் என விவசாய சங்கங்கள் அறிவித்தன. இதற்கு எதிராக மத்திய அரசு தொடர்ந்த வழக்கை விசாரிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.
read more: சசிகலாவுக்கு கொரோனா தொற்று உறுதி: மருத்துவமனை தகவல்!
இந்த நிலையில் விவசாயிகளுடன் மத்திய அரசு நேற்று மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனாலும், வழக்கம் போல இதுவும் தோல்வியில் முடிந்தது. வேளாண் சட்டங்களை மத்திய அரசு தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாகக் கூறினாலும், திட்டமிட்டபடி டெல்லியில் ஜனவரி 26ல் டிராக்டர் பேரணி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 3 வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறும்வரை போராட்டம் தொடரும் என்றும் தெரிவித்துள்ளனர்.