போராட்டம் செய்தால் கார் ஏற்றி கொல்லப்படும் விவசாயிகள்… இதுதான் சுதந்திர இந்தியாவா? அர்விந்த் கெஜ்ரிவால் கேள்வி

சுதந்திர இந்தியாவின் 75வது ஆண்டு கொண்டாடபடும் நிலையில் ஒருபக்கம் அரசியல் தலைவர்களை உ.பி செல்ல தடுக்கிறார்கள்! இது தான் சுதந்திரமா ? என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ளார்.

டெல்லி,
உத்திரபிரதேச மாநிலம் லக்கிம்பூரில் விவசாயிகள் மீது கார் ஏற்றி கொல்லப்பட்ட விவகாரம் பெரும் சர்சையாக நீடித்து வரும் சூழலில் டெல்லி முதலமைச்சரும் ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், இந்தியாவில் 75வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது, ஆனால் உண்மையில் சுதந்திரம் இல்லை. விவசாயிகள் உயிரிழந்த போது அவர்களை குடும்பத்தினரை சந்திக்க அரசியல் தலைவர்களுக்கு சுதந்திரம் இல்லை என விமர்சனம் செய்தார். மேலும், அரசியல் தலைவர்கள் உ.பி செல்லவிடாமல் ஏன்? தடுக்க படுகிறார்கள் எனவும் அதன் பின்பு உள்ள அரசியல் என்ன எனவும் கேள்வி எழுப்பினார். தொடர்ந்து பேசிய அவர், அதிகாரம் படைத்தவர்கள் என்றால் அமைதியாக சென்ற விவசாயிகள் மீது கார் ஏற்றி விட்டு செல்லமா? அதன் வீடியோ காட்சிகளை ஊடகங்களிலும், சமூக வலைதளங்களில் பரவும் நிலையில் பிரதமர் அதனை கவனிதரா? எனவும் ஏன் இதுவரை குற்றவாளிகள் மீது எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என கேள்வி எழுப்பினார்.

விவசாயிகளை கார் ஏற்றி கொல்லப்பட்ட விவகாரத்தில் கட்டாயம் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும், இவ்விவகரத்தில் சம்மந்தப்பட்டுள்ள மத்திய உள்துறை இணை அமைச்சரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

Exit mobile version