குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிடுவதற்கான ‘இறுதி வேட்பாளர் பட்டியலை’ குடியரசு துணைத் தலைவர் செயலகம் வெளியிட்டுள்ளது!
நாட்டின் 17வது குடியரசு துணைத் தலைவர் தேர்தல் செப்டம்பர் ஒன்பதாம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் ஆகஸ்ட் 7ம் தேதி தொடங்கிய நிலையில் ஆகஸ்ட் 21ம் தேதியுடன் வேற்றுமுன் தாக்கல் நிறைவடைந்தது. இந்நிலையில் வேட்பு மனுக்கள் மீதான ஆய்வு ஆகஸ்ட் 22ம் தேதி நடைபெற்ற நிலையில், வேட்பு மனுக்களை திரும்ப பெறுவதற்கான கடைசி தினம் ஆகஸ்ட் 25ம் தேதி என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இறுதி வேட்பாளர் பட்டியலை இன்று குடியரசுத் துணைத் தலைவர் செயலகம் வெளியிட்டுள்ளது. அதன்படி குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் பூச்சிரெட்டி சுதர்சன் ரெட்டி மற்றும் சி.பி ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட இருவர் மட்டுமே இறுதி வேட்பாளர்களாக உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் செப்டம்பர் ஒன்பதாம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்றும், அன்றைய தினம் மாலை 6 மணிக்கு பதிவான வாக்குகள் எண்ணும் பணி தேர்தல் அதிகாரியும் மாநிலங்களவை பொதுச் செயலாளருமான பி.சி மோடி கண்காணிப்பில் தொடங்கும் என குடியரசுத் துணைத் தலைவர் செயலகம் கூறியுள்ளது.