முதற்கட்டமாக 35 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்த சீமான்

சட்டமன்றத் தேர்தலுக்கான 35 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை நாம் தமிழர் கட்சியின் சீமான் வெளியிட்டார்

வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தற்போதே தயாராகி வருகின்றன. திமுக, அதிமுக, மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் பிரச்சாரத்தை தொடங்கி வேக வேகமாக முன்னேறி வருகின்றன. தேர்தலில் மக்கள் நீதி மய்யம், ஓவைசி கட்சியுடன் நாம் தமிழர் கட்சி கூட்டணி அமைக்கவுள்ளதாக தகவல்கள் வெளியானது.


ஆனால், இதனை மறுத்துவிட்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி என அறிவித்தார். அத்துடன் 50 சதவிகிதம் பெண் வேட்பாளர்களை நிறுத்தவுள்ளதாகவும், தான் திமுக தலைவர் ஸ்டாலினை எதிர்த்து போட்டியிடவுள்ளதாகவும் சீமான் அறிவித்தார்.


இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் திருச்சி, பெரம்பலூர், அரியலூர், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் நாகப்பட்டினம் மாவட்ட நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் சீமான் தலைமையில் தஞ்சையில் இன்று நடைபெற்றது. முதற்கட்டமாக தேர்ந்தெடுக்கப்பட்ட 35 வேட்பாளர்கள் கொண்ட பட்டியலை சீமான் வெளியிட்டார். தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்கள் நிகழ்வில் பங்கேற்று உறுதிமொழி ஏற்றனர்.

read more: மக்கள் வரிப்பணத்தில் அதிமுக விளம்பரம்: தேர்தல் ஆணையத்தில் புகாரளித்த திமுக!


இந்த வேட்பாளர்கள் கலந்தாய்வு நடந்த மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். அனைத்து கட்சிகளையும் முந்திக்கொண்டு வேட்பாளர்களை அறிவித்து களம் காண தயாராகிவிட்டார் சீமான். விரைவில் அடுத்தடுத்த வேட்பாளர்கள் பட்டியலையும் வெளியிடவுள்ளார்.

Exit mobile version