புதுச்சேரி முதல்வராக வேண்டும் என்று தமிழிசைக்கு ஆசை உள்ளதாக முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
புதுச்சேரி :
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த மாதம் 6 ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தங்களது கட்சிகள் தான் ஆட்சி அமைக்கவேண்டும் என்று ஒவ்வொரு கட்சிகளும் தீவிர பிரச்சாரம் மற்றும் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஏற்கனவே புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் அமைச்சரவையை இழந்தது. மேலும், அமித் ஷா முதல் பல கட்சி தலைவர்கள் நாராயணசாமி மீது குற்றங்களை அடுக்கி வருகின்றனர்.
Read more – அரசியலில் அடியெடுத்து வைக்கும் பிரபல நடிகரின் மனைவி : திமுக சார்பில் போட்டியா ?
இந்தநிலையில், துணைநிலை ஆளுநர் தமிழிசை மீது முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார். அதில், ‘தாமரை மலரும்’ என தமிழகத்தில் முதல்வராக ஆசைப்பட்டு, அது முடியாமல் போனதால் தற்போது புதுச்சேரி முதல்வர் அலுவலகத்தில் அமர்ந்து முதல்வராக தமிழிசை ஆசைப்படுகிறார் என்றார். மேலும், யாரிடமும் ஆலோசனை கேட்காமல் மாணவர்களுக்கு தேர்வு அறிவித்தது சரியல்ல. மாணவர்களை பாதிக்கும் இந்த முடிவை உடனடியாக தமிழிசை திரும்பப்பெற வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளார்.