அரசியல் குழப்பங்கள் நிகழும் புதுச்சேரி.. அதிகாரத்துடன் இன்று வருகை தரும் ராகுல் காந்தி…

பரபரப்பான அரசியல் சூழ்நிலை நிகழும் நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று புதுச்சேரி வருகிறார்.

புதுச்சேரி :

புதுச்சேரியில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் அடுத்தடுத்து 4 பேர் ராஜினாமா செய்ததால் ஆளும் காங்கிரஸ் அரசு பெரும்பான்மை இழந்துள்ளது. மேலும், தற்போது ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் தலா 14 எண்ணிக்கையில் சமபலத்துடன் இருப்பதால் எந்த நேரத்திலும் ஆட்சிக்கு ஆபத்து ஏற்படும் சூழலும் நிலவி வருகிறது.

அதனைத்தொடர்ந்து, காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்ததற்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண் பேடி தான் காரணம் என்று கருத்து பரவிய நிலையில், துணை ஆளுநர் கிரண்பேடி அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். மத்திய உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரையை ஏற்று குடியரசுத் தலைவர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். தெலங்கானா மாநிலத்தின் ஆளுநராக இருக்கும் தமிழிசை சவுந்தரராஜன் புதுச்சேரியின் துணைநிலை ஆளுநராக கூடுதல் பொறுப்பு வகிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலை நிகழும் நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று புதுச்சேரி வருகிறார்.

Read more – இன்றைய ராசிபலன் 17.02.2021!!!

தனி விமானம் மூலம் காலை 10.30 மணியளவில் லாஸ்பேட்டை விமானத்தளத்திற்கு வரும் ராகுல் காந்தி, முதல் கட்டமாக முத்தியால்பேட்டை – சோலை நகரில் மீனவர்களுடன் கலந்துரையாடுகிறார். அதன் பின்னர், பாரதிதாசன் மகளிர் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடுகிறார்.

மாலையில் AFT மைதானத்தில் நடைபெறும் பரப்புரை கூட்டத்திலும் கலந்துகொள்ளும் ராகுல்காந்தி, பின்னர் புதுச்சேரியில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ராஜினாமா குறித்துநிர்வாகிகளிடம் விளக்கம் கேட்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version