புதுவை மாநிலத்தில் அனைவருக்கும் கரோனா இலவச தடுப்பூசி; முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு…

புதுச்சேரி மாநிலத்தில் அனைவருக்கும் கரோனா இலவச தடுப்பூசி போடப்படும் என்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

புதுவையில் கொரோன தாக்கம் மிக குறைந்துள்ளது. மேலும் பாதிக்கப்பட்டவர்களில் 97 சதவீதம் குணமடைந்துள்ளனர். தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் வரை புதுவை மக்கள் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்க வேண்டுகோள் வைக்கிறேன் என நாராயசாமி கூறினார்.

மேலும் அவர் கூறியது யாதெனில்,புதுவையில் 14.5 லட்சம் மக்கள்தொகையில் 3.75 லட்சம் பேருக்குக் கரோனா பரிசோதனை செய்துள்ளோம். தினமும் 3000 முதல் 4000 வரை கொரோன பரிசோதனை செய்யப்பட முயற்சிகள் நடந்து வருகிறது. ஒரு நபருக்குக் கரோனா பரிசோதனை நடத்த ரூ.2,400 செலவாகிறது.

இதனை தொடர்ந்து மருத்துவக் கல்வியில் கடந்த 2008-ம் ஆண்டு அரசாணையின் மூலம் பிராந்திய ஒதுக்கீட்டை அமல்படுத்தினோம். இதேபோல, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத உள் ஒதுக்கீட்டை அரசாணை மூலம் வழங்கத் துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்குக் கோப்பு அனுப்பினோம். ஆளுநர் கிரண்பேடி இதற்கு அனுமதி தர மறுத்து மத்திய அரசுக்குக் கோப்பு அனுப்பியுள்ளார்.

இக்கோபுக்கு இன்று உள்துறை அமைச்சகத்திலிருந்து சுகாதாரத்துறைக்குச் சென்றுள்ளது. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 50 சதவீதம் அரசு ஒதுக்கீடு பெறுவது தொடர்பான கோப்பு மத்திய அரசிடம் உள்ளது. அதற்க்கு ஒப்புதல் தரவும் சுகாதாரத்துறையை சந்தித்து கூறியுள்ளேன்.

துணைநிலை ஆளுநர் கிரண்பேடியின் செயல்பாடுகள் குறித்து உள்துறை, குடியரசுத் தலைவர், பிரதமர் ஆகியோருக்குக் கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மக்கள் நலன்கள் தொடர்பான நாற்பது கோப்புகள் மத்திய அரசுக்கு கிரண்பேடி அனுப்பியுள்ளார். மக்கள் தேவைகளை செய்லபடுத்த கிரண்பேடியும் அரசுடன் சேர்ந்து செயல்படவேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Exit mobile version