ஜெயலலிதாவுடன் துணையாக இருந்து தவ வாழ்க்கை வாழ்ந்தவர் சசிகலா : முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா பேச்சு

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுடன் துணையாக இருந்து தவ வாழ்க்கை வாழ்ந்தவர் சசிகலா என்று கோகுல இந்திரா தெரிவித்துள்ளார்.

சென்னை :

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா சொத்து குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹார மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இன்று வரை சசிகலா சிறை தண்டனை அனுபவித்து வரும் நிலையில் வருகின்ற அடுத்த வருடம் ஜனவரி மாதம் 27 ம் தேதி விடுதலை செய்யப்பட உள்ளார். இதையடுத்து சசிகலா விடுதலை அ.தி.மு.கவில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று தமிழக அமைச்சர்கள் உள்பட பலரும் கூறி வருகின்றனர்.

Read more – அங்கன்வாடி மையங்கள் திறப்பது எப்போது ? மாநில அரசுகள் அறிக்கை சமர்ப்பிக்க உச்ச நீதிமன்றம் கெடு

இதுகுறித்து சென்னை அரும்பாக்கத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது: கட்சியின் தலைவராக இருந்தவர் சசிகலா, சசிகலா எங்கு இருந்தாலும் நாங்கள் மரியாதையுடன் போற்றக்கூடியவர். ஜெயலலிதாவுடன் துணையாக இருந்து தவ வாழ்க்கை வாழ்ந்தவர் சசிகலா என்றார்.

மேலும், அவர் எங்கே இருந்தாலும் சசிகலாவை தவறாக பேசுவதை பொறுத்துக்கொள்ள முடியாது என்றும் சசிகலா வெளியே வந்தாலும் ஒன்றும் நடக்காது என்றும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version