தமிழகத்தில் காலியாகவுள்ள 40,000 அரசுப் பணியிடங்கள் நிரப்பப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
தமிழக அரசின் 2025-26 ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்து உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர்,
“கடந்த 4 ஆண்டுகளில் 57,000 அரசுப் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும்,
பல்வேறு அரசுத் துறைகளில் காலியாக உள்ள 40,000 பணியிடங்கள் வரும் நிதியாண்டில் நிரப்பப்படும் என கூறினார்.
மேலும், 150 வகையான அரசு சேவைகளை இணைய வழியில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறிய அவர், அரசு ஊழியர்களுக்கு வங்கிகளில் கடன் பெற சலுகைகள் வழங்கப்படும்” என்று அறிவித்தார்.