வேலூர் மக்களை ஏமாற்றினாரா மு.க.ஸ்டாலின்?

கடந்த 3 பட்ஜெட்களாக வேலைவாய்ப்பு விவகாரத்தில் வேலூர் மக்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏமாற்றி வருவதாக பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா தெரிவித்துள்ளார். 

கடந்த ஜூலை 24ம் தேதி  2024 – 25ம் நிதியாண்டு மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில் தமிழக அரசுக்கு மத்திய அரசு சரியாக நிதி ஒதுக்கவில்லை என முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு கட்சியினரும் குற்றச்சாட்டினர். 

இதுகுறித்து ஏற்கனவே விளக்கமளித்திருந்த பாஜக மாநிலத்  தலைவர் அண்ணாமலை,  “பட்ஜெட் உரையில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள மாநிலங்களுக்கான நலத்திட்டங்களைத் தவிர, பிற மாநிலங்களுக்கு எந்த நலத்திட்டங்களும் கிடைக்கப்பெறாது என்ற தோற்றத்தை ஏற்படுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் முயற்சிக்கிறார். மத்தியில் காங்கிரஸ் கட்சியுடன் கடந்த 2004 முதல் 2014 வரை 10 ஆண்டுகள் திமுக கூட்டணியில் இருந்தபோது, தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்களில், 6 ஆண்டுகள், தமிழகத்தின் பெயர் இடம்பெறவில்லை” என்பதையும் சுட்டிக்காட்டினர். 

இருப்பினும் இன்றளவும் மத்திய பட்ஜெட் தாக்கலை மட்டுமே வைத்து அரசியல் செய்து வரும் தமிழ்நாடு அரசிற்கு பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா பதிலடி கொடுத்துள்ளார். பிரபல செய்தி தொலைக்காட்சியின் வட்டமேஜை விவாதம் ஒன்றில் பங்கேற்ற அவர், மத்திய பட்ஜெட் உரையில் சென்னை என்ற பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதையும், அது தமிழ்நாட்டில் தான் உள்ளது என்பதையும் தமிழ்நாடு அரசிற்கு சுட்டிக்காட்டியுள்ளார். 

மேலும் தொடர்ந்து பேசிய அவர், சொல்வதை செய்யக்கூடிய அரசு எனக்கூறும் திமுக கடந்த 3 பட்ஜெட்களில் வேலூர் மக்களை ஏமாற்றி வருவதாக தெரிவித்துள்ளார். 2022 – 2023 பட்ஜெட்டில் பாயிண்ட் நெம்பர் 142, 2023 – 2024 பட்ஜெட்டில் பாயிண்ட் நெம்பர் 122 , 2024 பட்ஜெட்டில் பாயிண்ட் நெம்பர் 112 ஆகிய மூன்றிலுமே வேலூரில் தொழிற் பூங்கா அமைக்கப்பட்டு 50 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் முதலீடு கொண்டு வந்து, ஒரு லட்சம் பேருக்கு வேலை கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஒரு கோடி ரூபாயாவது முதலீடாக வந்துள்ளதா? என திமுக தெரிவிக்க வேண்டும் என கேள்வி எழுப்பினார். 

இதற்கு திமுக தரப்பில் பேசியவர், பிரதமர் மோடி தலைமையிலான அரசு எவ்வித வேலைவாய்ப்பையும் உருவாக்கவில்லை என குற்றச்சாட்டினார். இதற்கு சற்றும் தாமதிக்காத எஸ்.ஜி.சூர்யா தனது கையில் இருந்த ஐபோனை உயர்த்திக் காட்டி, “இது ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஐபோன் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டது. இதுபோல் லட்சக்கணக்கான போன்கள் உற்பத்தியாகக்கூடிய தொழிற்சாலை தமிழகத்தில் அமைய பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசே காரணம் எனக்கூறினார். இதைக்கேட்டு விவாத அரங்கில் பெரும் ஆராவாரம் எழுந்தது. 

Exit mobile version