காங்கிரஸ் கமிட்டி தலைவர் சோனியா காந்தியின் மீது போடப்பட்ட பொய்வழக்கைக் கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தென்சென்னை மத்திய மாவட்ட காங்கிரஸ் பொருளாளர் ஜோதி பொன்னம்பலம் போராட்டத்தில் ஈடுபட்டார்.
‘நேஷனல் ஹெரால்டு’ என்கின்ற பொய் வழக்கை ஜோடித்து அகில இந்திய காங்கிரஸ் தலைவர் அன்னை சோனியா காந்தி அவர்களை அமலாக்கத்துறை நேரில் ஆஜராகும்படி தெரிவித்துள்ளது. மத்திய அரசின் கைப்பாவையாக செயல்பட்டு, பொய் வழக்குகளைப் புனையும் அமலாக்கத் துறையைக் கண்டித்து விருகம்பாக்கம் ஆற்காடு சாலையில் மகாத்மா காந்தியின் வழியில் சத்தியாகிரக போராட்டம் நடைபெற்றது. தென்சென்னை மத்திய மாவட்ட காங்கிரஸ் பொருளாளர் ஜோதி பொன்னம்பலம் மற்றும் ஐநூறுக்கும் மேற்பட்ட காங்கிரஸ் தொண்டர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். போராட்டத்தின் போது மத்திய அரசுக்கு எதிராகவும், அமலாக்கத்துறைக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.