ராயபுரத்தில் ₹2.5 கோடியில் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணிகள் தொடக்கம்

மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாக சாலைகளில் மழைநீர் தேங்காமல் இருக்க 2.5 ரூபாய் கோடி செலவில் மழை நீர் கால்வாய் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாக மழை நீர் கால்வாய்களை அமைத்து மழை நீர் தேங்காமல்  இருக்க சென்னை மாநகராட்சி நிர்வாகம் களமிறங்கியுள்ளது சென்னை ராயபுரம் சட்டமன்ற தொகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக மழைக்காலங்களில் சாலைகளில் அதிக அளவு மழைநீர் தேங்கி  மக்கள்  அவதிப்பட்டு வருகின்றனர்.

இந்த பாதிப்பை தவிர்க்கும் விதமாக, வண்ணாரப்பேட்டை நல்லப்ப வாத்தியார் தெரு  திருவொற்றியூர் நெடுஞ்சாலை பகுதியில் 2.5. கோடி ரூபாய் செலவில் புதியதாக மழை நீர் கால்வாய் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டன. இந்த பணியினை  மாநகராட்சி நகரமைப்பு குழு தலைவர் தா. இளைய அருணா, ராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஐடீரீம் மூர்த்தி, மாமன்ற உறுப்பினர் விஜயலட்சுமி விஜயகுமார்  ஆகியோர் தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில், தண்டையார்பேட்டை மண்டல குழு தலைவர் நேதாஜி யு.கணேசன், இராயபுரம் மேற்கு பகுதி செயலாளர் வ.பெ.சுரேஷ், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ரெயின்போ விஜயகுமார், வட்ட செயலாளர் பாலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஒவ்வொரு மழை காலங்களிலும் ராயபுரம் பகுதிகளில் சாலைகளில் மழைநீர் தேங்கி வாகன ஓட்டிகள்  வாகனங்களை இயக்க முடியாத சூழ்நிலை இருப்பதினால் கால்வாய் அமைக்கும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

-பா.ஈ.பரசுராமன்.

Exit mobile version