இபிஎஸ் அதிமுகவின் இடைக்காலப் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லாது என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் இபிஸ் இடைக்காலப் பொதுச்செயலாளராக தேர்வுசெய்யப்பட்டார். ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கில் நீதிமன்றம் கீழ்கண்டவாறு தீர்ப்பளித்துள்ளது.
அதாவது, அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக இபிஎஸ் தேர்வு செய்யப்பட்டது செல்லாது. அதிமுகவில் ஜூன் 23ம் தேதிக்கு முன்பிருந்த நிலையே நீடிக்க வேண்டும். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்துதான் கூட்டத்தை கூட்ட வேண்டும். தனிக்கூட்டம் கூட்டக் கூடாது. பொதுக்குழுவை கூட்ட ஆணையரை நியமிக்க வேண்டும்.அதிமுகவில் ஜூன் 23ம் தேதிக்கு பிறகு நடந்தது எதுவும் செல்லாது. பொதுக்குழுவை கூட்டுவதற்கு 30 நாட்களுக்கு முன் நோட்டீஸ் அனுப்ப வேண்டும். என தீர்ப்பில் கூறியுள்ளது.
இந்த தீர்ப்பை ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில், சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜெயக்குமார் கூறியுள்ளார்.