Site icon SeithiAlai

இதுல எது சார் உண்மை? அதிமுக vs திமுக

அதிமுகவில் உள்ள 50 எம்எல்ஏக்கள், 2எம்பிக்கள் திமுகவுடன் தொடர்பில் இருப்பதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

திருவள்ளூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பின் பேசிய அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர்  எடப்பாடி பழனிசாமி, திமுக எம்எல்ஏக்கள் 10 பேர் தன்னுடன் பேசி வருவதாக தெரிவித்திருந்தார். இதற்கு திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி பதிலளித்துள்ளார்.

ஆர்.எஸ்.பாரதி கூறியதாவது: அதிமுகவில் உள்ள அனைவரும் திமுகவில் இணைந்து பயணிக்க வேண்டும். அதிமுகவில் உள்ள 50 எம்எல்ஏக்கள், 30 மாவட்ட செயலாளர்கள், 2 எம்பிக்கள் திமுகவுடன் தொடர்பில் இருக்கின்றனர். எடப்பாடி பழனிசாமி பட்டியலை வெளியிட்டால் நானும் பட்டியலை வெளியிடுவேன் என்றார். தொடர்ந்து பேசிய அவர், ராகுல் காந்தியின் காஷ்மீர்- கன்னியாகுமரி வரையிலான நடைபயணத்தை எல்லா தமிழரும் ஏற்றுக்கொண்டுள்ளனர். இந்த பயணம் பாஜகவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று கூறினார்.

Exit mobile version