அன்புமணியை கட்சியை விட்டு நீக்குவேன் – ராமதாஸ்

நான் கூட்டிய நிர்வாகிகள் கூட்டத்திற்கு வர வேண்டாம் என நிர்வாகிகளுக்கு போன் போட்டுச் சொன்னவர் அன்புமணி என ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

பாமகவில் உட்கட்சிப் பூசல் நிலவி வந்த நிலையில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தைலாபுரத்தில் இன்று  செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய ராமதாஸ், அன்புமணியைப் பற்றி ஏராளமான கருத்துகளைப் பகிர்ந்து கொண்டு இருக்கிறார். நான் கூட்டிய கூட்டிய கூட்டத்திற்கு நிர்வாகிகளை வர வேண்டாம் என்று சொன்னவர் அன்புமணி. கூசாமல் பொய் பேசுபவர் அன்புமணி, பதவியை விட்டு தூக்குவேன் என்று நான் சொல்லவில்லை. பொதுக்குழுவிற்கு தமிழ்க்குமரன் வரக்கூடாது என அன்புமணி சொன்னார். பாமகவை உழைத்து வளர்த்தவர்கள் யார், பல்லாயிரம் கிராமங்கள் தோறும் பயணித்தவன் நான்.

தலைமைப் பண்பு இல்லாதவர் அன்புமணி. பாஜகவுடன் கூட்டணி அமைக்க அன்புமணியே காரணம். பாஜக கூட்டணிக்கான ஏற்பாட்டைச் செய்தவர் செளமியா அன்புமணி. பாஜகவின் கூட்டணிக்காக அன்புமணியும், சௌமியாவும் என் காலைப் பிடித்துக் கெஞ்சினார்கள். இல்லையென்றால் எனக்கு கொள்ளி போடுங்கள் என்று அன்புமணி சொன்னார். நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்திருந்தால் 3 சீட்டுகள் வெற்றி பெற்று இருக்கலாம். அதிமுகவிற்கு 6, 7 சீட்டுகள் கிடைத்திருக்கும்.

நான் கூட்டிய கூட்டத்திற்கு எட்டு பேர் தான் வந்தார்கள். அன்றே நான் இறந்து விட்டேன். தேவையென்றால் பொதுக்குழுவை கூட்டி அன்புமணியை கட்சியை விட்டு நீக்குவேன். அன்புமணியை அமைச்சராக்கியது என் தவறுதான். குருவை அன்புமணி கீழ்த்தரமாக நடத்தியதை ஏற்க முடியாது. வளர்த்த கடா மார்பில் பாய்ந்து விட்டது. கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்று இருந்த கட்சியில் கலகத்தை ஏற்படுத்தி விட்டார் அன்புமணி. தாயை பாட்டிலால் அடிக்க முயன்றவர் அன்புமணி. பொதுக்கூட்டத்தில் மைக்கைத் தலையில் தூக்கிப் போடுவதைப் போல அன்புமணி செயல்பட்டார். தகப்பனிடம் தோற்பதும் ஒன்றும் மானக்கேடு அல்ல. மன உளைச்சலில் இருப்பதாகக் கூறி அனுதாபம் தேட முயற்சிக்கிறார் அன்புமணி.

செயல் தலைவர் என்று சொன்ன போது அதை ஏற்று ஒரு சுற்று வருவேன் என்று சொல்லி இருக்க வேண்டும். அல்லது பாமகவில் ஒரு தொண்டனாக வலம் வருவேன் என்று சொல்லி இருக்க வேண்டும் என்று தெரிவித்தார். இந்த சந்திப்பின் போது அன்புமணியைப் பற்றிப் பேசும் போது கண்கலங்கிய படி பேசினார்.  

Exit mobile version