நடப்பாண்டிலே இட ஒதுக்கீடு வழங்காவிட்டால் பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என அறிவிக்க வேண்டும்…

நடப்பாண்டிலே இட ஒதுக்கீடு வழங்காவிட்டால் பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என்று அறிவிக்க வேண்டும் என்று முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

நடப்பாண்டிலே இட ஒதுக்கீடு வழங்காவிட்டால் பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என்று அறிவிக்க வேண்டும் என்று முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
50 சதவீத இடஒதுக்கீடு
அகில இந்தியத் தொகுப்பிற்கு மாநிலங்களில் இருந்து ஒதுக்கப்பட்ட மருத்துவக் கல்விக்கான இடங்களில், இந்தக் கல்வி ஆண்டே 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க உத்தரவிட முடியாது என்று உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மாணவர்களுக்கு மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது.

மத்திய அரசின் வாதத்தாலும், அ.தி.மு.க. அரசு துணிச்சலுடன் வாதிடாமல் போனதாலும் இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு இந்தப் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மாணவர்களின் மருத்துவக் கனவை மத்திய அரசும் – அ.தி.மு.க. அரசும் திட்டமிட்டுக் கலைத்திருக்கிறது.
இடஒதுக்கீடு வேண்டும்
ஆகவே, அகில இந்தியத் தொகுப்புக்கு ஒதுக்கப்பட்ட மருத்துவக் கல்வியிடங்களில் இந்த ஆண்டே 50 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்கிட வேண்டும். பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினர் இட ஒதுக்கீட்டில் காட்டிய அவசரத்தைப் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்காகவும் – பட்டியலின சமூகத்திற்காகவும் பிரதமர் காட்ட வேண்டும்.

பா.ஜ.க. கூட்டணி
இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்குச் சட்ட உரிமையாக உள்ள 27 சதவீத இட ஒதுக்கீட்டை இந்த ஆண்டே செயல்படுத்தி – பிறகு கமிட்டி அறிக்கையின் அடிப்படையில் 50 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்கலாம் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்திற்குப் பிரதமர் உத்தரவிட வேண்டும். இந்த ஆண்டு இட ஒதுக்கீடு வழங்காவிட்டால் பா.ஜ.க.வுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் முதல்வர் பழனிசாமி அறிவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version