சசிகலா உடல்நிலையில் முன்னேற்றம் -மருத்துவமனை தகவல்

கொரோனா தொற்றால்  பாதிக்கப்பட்டு பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சசிகலாவின் உடல்நிலையில் முன்னேற்றம் உள்ளது.

விக்டோரியா அரசு மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர் ரமேஷ் கிருஷ்ணா இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருக்கும் சசிகலாவுக்கு 5 லிட்டர் ஆக்சிஜனை உதவியோடு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு ஆக்சிஜன் அளவு 95 லிருந்து 98 விழுக்காடாக அதிகரித்துள்ளது.விக்டோரியா அரசு மருத்துவமனையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட சுமார் 7 ஆயிரத்து 500 பேர் சிகிச்சை பெற்று குணம் அடைந்துள்ளனர்.

மருத்துவமனையில் அனைத்து வசதிகளும் இருப்பதால் உரிய சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. நுரையீரல் தொற்றும் குறைந்து வருகிறது.. சசிகலா உறவினர்கள் தனியார் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்க எங்களிடம் கோரிக்கை வைத்தனர். ஆனால் அதை நிராகரித்தது உண்மைதான். உலகத்தரம் வாய்ந்த சிகிச்சை இங்கு அவருக்கு அளிக்கப் படுகிறது. விக்டோரியா மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற சசிகலா சம்மதம் தெரிவித்துள்ளதாக டாக்டர் ரமேஷ் கிருஷ்ணா தகவல் தெரிவித்துள்ளார்

Exit mobile version