நம்பிக்கை வாக்கெடுப்பு தோல்வி… புதுச்சேரியில் கவிழ்ந்த ஆட்சி…

புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்ததாக சபாநாயகர் அறிவித்தார்.

புதுச்சேரி :

புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் கட்சியில் இருந்து அடுத்தடுத்து எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்த நிலையில், நாராயணசாமி தலைமையிலான அரசு தனது பெரும்பான்மையை நிரூபிக்கும்படி ஆளுநர் உத்தரவின் பெயரில் இன்று புதுச்சேரி சட்டசபை சிறப்புக் கூட்டம் தொடங்கியது.

இக்கூட்டத்தில் அரசு மீதான நம்பிக்கை கோரும் தீர்மானத்தை தாக்கல் செய்து முதல்வர் நாராயணசாமி வலியுறுத்தி, புதுச்சேரியில் காங்கிரஸ் அரசுக்கு பெரும்பான்மை உள்ளது என்றும், ஆட்சியை கவிழ்க்க சதி செய்வதாகவும் கூறினார்.

இந்தநிலையில், அரசுக்கு பெரும்பான்மை நிரூபிக்க முடியாமல் நம்பிக்கை வாக்கெடுப்பு தோல்வியில் முடிந்தது . இதையடுத்து அரசு பெரும்பான்மையை இழந்ததாக சபாநாயகர் சிவக்கொழுந்து அறிவித்தார்.

Read more – மக்களால் தோற்கடிக்கப்பட்டவர்கள், எங்களை தோற்கடிக்க பார்க்கிறார்கள்.. புதுச்சேரி முதல்வர் பேச்சு

புதுச்சேரி சட்டசபையில் காங்கிரஸ் கூட்டணியின் பலம் 12 ஆகவும், எதிர்க்கட்சிகளின் பலம் நியமன உறுப்பினர்களையும் சேர்த்து 14 ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் தற்போது புதுச்சேரி சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க தவறியதால் முதல்வர் பதவியில் இருந்தும், அமைச்சரவையும் கூண்டோடு ராஜினாமா செய்வதாகவும் ஆளுநரிடம் நாராயணசாமி கடிதம் வழங்கினார்.

Exit mobile version