மத்திய அரசு ஒரு போதும் விவசாயிகளின் வலியை புரிந்துகொள்வது இல்லை – ராகுல் காந்தி பேச்சு

இரண்டு மூன்று நபர்கள் இந்திய விவசாயத்தை சொந்தமாக்கும் திட்டமே இந்த வேளாண் மசோதா என்று வயநாட்டில் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

வயநாடு :

கேரள மாநிலம் வயநாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி விவசாயிகளுடன் டிராக்டர் பேரணியில் பங்கேற்றார். அதன் பிறகு பொது மக்களிடம் பேசிய அவர், இந்திய விவசாயிகள் எதிர்கொள்ளும் சிரமத்தை உலகமே பார்க்கிறது.

ஆனால் மத்திய அரசால் விவசாயிகளின் வலியை புரிந்துகொள்ள முடியவில்லை. விவசாயிகளின் நிலைமை குறித்து கருத்து தெரிவிக்கும் பாப் நட்சத்திரங்கள் நம்மிடம் உள்ளனர் இருந்தும், மத்திய அரசு மக்கள் மீது அக்கறை கொள்ளவில்லை

Read more – இது தமிழ்நாடு ,உ. பியோ, பீகாரோ இல்லை.. வாக்கு பெட்டியில் கைவைத்தால் வகுந்துவிடுவோம்.. பா.ஜ.கவிற்கு எச்சரிக்கை விடும் துரைமுருகன்

3 புதிய சட்டங்களை அவர்கள் திரும்பப் பெறப்போவதில்லை, இந்த 3 சட்டங்கள் இந்தியாவில் விவசாய முறையை அழிப்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளன. இரண்டு மூன்று நபர்கள் இந்திய விவசாயத்தை சொந்தமாக்கும் திட்டமே இந்த வேளாண் மசோதா சட்டம் என்று தெரிவித்தார்.

Exit mobile version