பெரும் நிறுவனங்களின் கொத்தடிமைகளாக சிறு, குறு நிறுவனங்களை மாற்றுவதுதான் பொருளாதார கொள்கையா என்று மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
பெரும் நிறுவனங்களின் கொத்தடிமைகளாக சிறு, குறு நிறுவனங்களை மாற்றுவதுதான் பொருளாதார கொள்கையா என்று மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
திருப்பூர் நிர்வாகிகளுஸடன் காணொலி காட்சி மூலமாக நடைபெற்ற தமிழகம் மீட்போம் பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
மக்கள் பணி அல்ல
கடந்த பத்தாண்டுக் காலமாக பெரிய நிறுவனங்களாக இருந்தாலும், சிறுகுறு நிறுவனங்களாக இருந்தாலும் அவை செயல்பட முடியாமல் மூச்சுத்திணறலுக்கு உள்ளாகி வருகின்றன. அதற்கு மத்திய அரசும், மாநில அரசும் தான் முழுமுதல் காரணம். இந்த பத்தாண்டுக் காலத்தில் எத்தனையோ திட்டங்களை இந்த மண்டலத்துக்குக் கொண்டு வந்திருக்கலாம். ஆனால் அவர்கள் அதனைச் செய்தார்களா?
வேலுமணியும் தங்கமணியும் எடப்பாடி பழனிசாமிக்கு இணையாகச் சம்பாதிப்பதில் போட்டி போடுகிறார்களே தவிர, மக்கள் பணிகளைச் செய்யவில்லை
ஊழல் வண்டி
ஸ்மார்ட் சிட்டி ஊழல், எல்.ஈ.டி. பல்பு ஊழல், குப்பை அள்ளும் வண்டி கொள்முதலில் ஊழல், சென்னை பெருநகர குடிநீர் வடிகால் வாரிய டெண்டரில் ஊழல், வேலை நியமன ஊழல், எம் சாண்ட் பயன்படுத்துவதில் ஊழல் என்று வண்டி வண்டியாக ஊழல் செய்தவர்தான் அமைச்சர் வேலுமணி.
வேறு வழியில்லாத நிலையில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தினர். கிராமப் பகுதிகளுக்கு நடத்தினார்களே தவிர, நகராட்சிக்கு நடத்தவில்லை. ஏன் நடத்தவில்லை? நகராட்சியில்தான் அதிகமாகக் கொள்ளையடிக்க முடியும் என்பதால் நடத்தவில்லை. அமைச்சர் வேலுமணி மீதான ஊழல் புகார்களை மட்டும் விசாரிக்கத் தனி நீதிமன்றமே அமைக்க வேண்டும்.
கொங்கு மண்டலத்துக்கு என்ன பயன்?
முதல்வர் எடப்பாடி பழனிசாமியோ, இந்த மண்டலத்தைச் சேர்ந்த செங்கோட்டையன், வேலுமணி, தங்கமணி, உடுமலை ராதாகிருஷ்ணன், கருப்பண்ணன் ஆகிய யாராலும் இந்த மண்டலத்துக்கு என்ன பயன் என்று பார்த்தால், எதுவும் இல்லை.
தங்கள் பதவியைப் பயன்படுத்தி தங்கள் குடும்பத்துக்கு, உறவினர்களுக்கு, பினாமிகளுக்கு சொத்துச் சேர்த்துக் கொடுத்தார்கள். பத்து ஆண்டுகளாக நெடுஞ்சாலையைக் கவனித்து வரும் எடப்பாடி பழனிசாமி என்ன செய்தார்?
தவறான பொருளாதார கொள்கை
சாயப்பட்டறைகள் மூலமாகச் சுற்றுச்சூழல் மாசுபடுவதைப் பற்றிக் கவலைப்படாத அரசு இந்த அரசு. கொங்கு மண்டலத்திற்கு அ.தி.மு.க.வினர் எந்த நன்மையையும் செய்யவில்லை. இவர்கள் நினைத்திருந்தால் தொழில் வளர்ச்சி இந்த மாவட்டத்தில் இந்த அளவுக்குப் பாதிக்கப்பட்டு இருக்குமா?
மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைக்குச் சாட்சி வேண்டுமானால் திருப்பூர் ஒன்று போதும். பிரிட்டிஷ் ஆட்சி
மாதத்தின் முதல் 15 நாட்களுக்குள் கொள்முதல் விவரங்களைச் சொல்ல வேண்டும். 30ஆம் தேதிக்குள் இவற்றுக்கான வரிகளையும் முன்கூட்டியே செலுத்திவிட வேண்டும் என்பது பிரிட்டிஷ் ஆட்சி காலத்து வரி வசூலைப் போல இருக்கிறதே தவிர மக்களாட்சி வரி வசூலாகத் தெரியவில்லை. கொத்தடிமையா: எல்லாச் சிறு நிறுவனங்களும் ஜிஎஸ்டியில் பதிவு செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது. இது வர்த்தகத்தையே அழித்து வருகிறது. இதனால் திருப்பூரில் 60 சதவிகித சிறுதொழில் நிறுவனங்கள் முடங்கிவிட்டன. பெரும் நிறுவனங்களின் கொத்தடிமைகளாக சிறு – குறு நிறுவனங்களை மாற்றுவதுதான் உங்களின் பொருளாதாரக் கொள்கையா?
8 மணி நேர வேலையை 12 மணி நேரமாக அதிகப்படுத்தப்படுத்தப் போகிறார்கள் என்பதுதான் அது. இதைவிடத் தொழிலாளர் விரோதக் கொள்கை ஒன்று இருக்க முடியாது.
துடைக்க வேண்டும்
மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தது முதல் தொழிலாளர் உரிமைகள் தொடர்ந்து பறிக்கப்படுகின்றன. தொழிலாளர் விரோதச் சட்டங்கள் உருவாக்கப்படுகின்றன. கொரோனாவைப் பயன்படுத்தி இதுபோன்ற மக்கள் விரோதச் சட்டங்களை நிறைவேற்றிக் கொள்கிறார்கள். இத்தகைய அவல நிலை துடைக்கப்பட வேண்டும். தடுத்து நிறுத்தப்பட வேண்டும். மோடி அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைகள் தொழிலையும், தொழிலாளர்களையும் நலிவடையச் செய்கின்றன.
தனியார் நிறுவனங்களில் மட்டுமல்ல மத்திய அரசுப் பணிகளான ரயில்வே, தபால் போன்ற பணிகளில் தமிழ்நாட்டு இளைஞர்கள் புறந்தள்ளப்படும் சூழல் உருவாகி வருகிறது. இந்தியைக் காரணம் காட்டி, தமிழ் இளைஞர்களின் வேலை உரிமைகள் பறிக்கப்படுகின்றன.
கற்றுத்தர வேண்டாம்
நான் மொழி வெறியை, இனவெறியைத் தூண்டுவதாக யாரும் நினைக்கவேண்டாம். தமிழ்நாட்டு இளைஞர்களுக்குக் கிடைக்கவேண்டிய வேலைவாய்ப்பு பறிக்கப்படுகிறது. கார்ப்பரேட்டுகளுக்கு நாட்டை விற்பவர்கள், எங்களுக்கு நாட்டுப்பற்றைக் கற்றுத் தரத் தேவையில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.