சூரப்பா என்ன மாநில முதல்வரா?- மு.க.ஸ்டாலின்

அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மாநில அரசு நிதி தேவையில்லை என கடிதம் எழுத துணைவேந்தர் சூரப்பா என்ன மாநில முதல்வரா என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.

அண்ணா பல்கலைகழகம் மாநில அரசின் நிதி தேவையில்லை என்று கடிதம் எழுதியுள்ளது. அதை துணை வேந்தர் சூரப்பா எழுதையுள்ளார். அதற்கு பதிலளித்த ஸ்டாலின் இவ்வாறு கூறுவதற்கு சூரப்பா என்ன மாநில முதல்வரா என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.

அப்போது திமுக தலைவர் கூறுவது யாதெனில் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மாநில அரசு நிதி தேவையில்லை என கடிதம் எழுத துணைவேந்தர் சூரப்பா என்ன மாநில முதல்வரா?

ஒரு துணைவேந்தர் எப்படி தன்னிச்சையாக மத்திய அரசுக்கு கடிதம் எழுத முடியும்.

கல்வியை காவிமயமாக்க சூரப்பாவுக்கு அண்ணா பல்கலைக்கழகம் தான் கிடைத்ததா?

அண்ணா பல்கலைக்கழகத்தை பிரிக்கும் சட்ட முன்வடிவை ஆளுநர் நிராகரிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Exit mobile version