வடிவேலு பாஜகவில் சேரப் போவதாக வெளியான தகவல் குறித்த உண்மை தெரிய வந்துள்ளது.
பிரபல காமெடி நடிகர் வடிவேல் தற்போது இருபத்தி மூன்றாம் புலிகேசி படத்தின் சர்ச்சையை தொடர்ந்து இன்னும் எந்த படத்திலும் நடிக்காமல் இருக்கின்றார். இதனை தொடர்ந்து அவர் விரைவில் ப.ஜகா.வில் சேரப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தான் பாஜகவில் சேர்வதாக வெளியான தகவலில் உண்மை இல்லை என்று வடிவேலு தெரிவித்துள்ளார். மீண்டும் அரசியல் பக்கம் செல்லும் ஐடியாவே தனக்கு இல்லை என்று வடிவேலு பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார். கடந்த 2011 ஆம் ஆண்டு வடிவேலுவின் அரசியல் பிரச்சாரத்தையும் அதனால் ஏற்பட்ட விளைவையும் வடிவேலும் சரி வடிவேல் அவர்களின் ரசிகர்களும் சரி இன்னும் மறந்திருக்க வாய்ப்பில்லை.
அனால் இது போன்று வதந்திகள் வருவது ஒன்றும் முதல் முறை இல்லை. சினிமா பிரபலங்களுக்கு இது சாதாரணம் தான் ஆனால் சிலநேரங்களில் வதந்திகள் உண்மையாகவும் வாய்ப்பு உண்டு. காங்கிரஸ் காதசியில் இருந்த குஷ்பூ அவர் பஜகாவில் சேர்வதாக வந்த செய்தி வதந்தி என்றார் பின்னர் ஒரு வாரத்தில் அது உண்மையானது.