ஒட்டுமொத்த ஜெய்ஸ்வால் இனங்கள் ஒருங்கிணைக்கக்கூடிய மாநாடு இந்தாண்டு இறுதிக்குள் நடைபெறும் என பாமக பொருளாளர் திலகபாமா தெரிவித்துள்ளார்.
ஜெய்ஸ்வால் க்ளப்பின் எட்டாவது செயற்குழு கூட்டம் ஹைதராபாத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட பாமக பொருளாளர் திலகபாமா அவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்த்தினார். கூட்டத்திற்கு மனோஜ் ஜெய்ஸ்வால் தலைமை தாங்க. ராகேஷ் ஜெய்ஸ்வால் ஒருங்கிணைப்பு மேற்கொண்டார்.
இந்நிகழ்வில் ஜெய்ஸ்வால் சமூகத்திற்கு கல்வி , வேலை வாய்ப்பில் முன்னுரிமை மற்றும் பெண்களுக்கான முன்னேற்றம் குறித்துப் பேசப்பட்டது. ஒட்டுமொத்த ஜெய்ஸ்வால் மற்றும் 30 இனங்கள் ஒருங்கிணைக்கக்கூடிய மாநாடு இந்தாண்டு இறுதிக்குள் நடத்துவதென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.