அனுமதி மறுக்கப்பட்டால் தடையை மீறி கூட்டத்தை நடத்துவோம் –காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி ஆவேசம்!!

தேனி மாவட்டம் போடி சாலையில் இன்று காலை நடக்கும் விவசாயிகள் கூட்டத்தில் கலந்துகொள்ள காங்கிரஸாருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டியுள்ளார்.

ஆளும் மத்திய பாஜக அரசு இரு அவைகளிலும் வேளாண் சட்டங்களை இயற்றியது.ல் இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சிகள் எதிர்த்தன

இந்நிலையில், இன்று தேனி மாவட்டம் போடி சாலையில் இன்று காலை  வேளாண் சட்டங்களுக்கு எதிரான கூட்டத்திற்கு விவசாயிகள் டிராக்டர்களில் செல்ல காங்கிரஸார் திட்டமிட்டனர்.

அதன்படி இன்று அப்பகுதியில் செல்ல முயன்றபோது  காங்கிரஸ் கொடியுடன் செல்லும் காங்கிரஸாரின் வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

இதுகுறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, வேளான் சட்டத்திற்கு எதிராக காங்கிரஸார் நடத்தும் கூட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டால் தடையை மீறி கூட்டத்தை நடத்தப்படும் எனவும், விவசாயிகள் கூட்டத்திற்கு அனுமதி வழங்க மாவட்ட காவலதுறைக்கு டிஜிபி உத்தரவிட வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் கூட்டத்திற்கு வரும் விவசாயிகள் தடுக்கப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

Exit mobile version