அதிமுகவில் பிரச்சினையே இல்லை. அரசு சிறப்பாக செயல்பட துணை முதல்வர் ஓபிஎஸ் துணையாக இருக்கிறார் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.

அதிமுக செயற்குழுவில் பல்வேறு விவாதங்கள் நடந்தன. தேர்தல் வரும் நேரத்தில், என்ன நிலைப்பாட்டை எடுக்கலாம். யாருடன் கூட்டணி வைக்கலாம் என்றெல்லாம் விவாதங்கள் நடந்தன. யார் முதல்வர் என்று கேள்வி அங்கு எழவில்லை. அதிமுகவில் பிரச்சினையில்லை.
அதிமுகாவில் பிரச்னை இருக்கின்றது என்று யாரோ புரளியை கிளப்பி வருகிறார்கள். இதனை அடுத்து துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ் அவர்கள் தன் ட்விட்டர் பக்கத்தில் தெளிவாக பதிவதில்லை இருந்தார். அவர் துணை முதல்வர் மட்டுமல்ல அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமாக உள்ளார். அவரை கட்சியின் நிர்வாகிகள் என்று சந்திப்பது ஒரு இயல்பான விஷயம் தான். அதற்க்கு வேண்டி ஆதிமுகாவில் பிரச்சனை என்று வரும் வதந்தி உண்மையாகாது. மேலும் இதை அரசியலாக்கி பார்ப்பவர்களுக்கு அரசியலாகத் தெரியும்.
இவ்வாறு செய்தியாளர்களை கோவில்பட்டியில் பேசிய கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.