சட்டமன்ற தேர்தலில் மாற்றுத்திறனாளி ஒருவருக்கு சீட் கட்டாயம் : கமல்ஹாசன் பேச்சு

மாற்றுத்திறனாளி ஒருவரை சட்டமன்ற தேர்தலில் வேட்பாளராக நிறுத்துவோம் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

சென்னை,

தமிழகத்தில் அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது.  இதற்கான அரசியல் பணிகளில் பல்வேறு கட்சிகளும் ஈடுபட்டு வருகின்றன.  மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தேர்தல் பிரசார பணிகளை தொடங்கி மக்களை சந்தித்து பேசி வருகிறார்.

Read more – தலைமைச் செயலக உதவியாளர் பணிக்கு வயது வரம்பை உயர்த்த வேண்டும் : டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்

இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று பேசும்பொழுது, தமிழகத்திற்கு மாற்றம் வேண்டும் என எல்லோரும் விரும்புகிறார்கள்.  தமிழகத்தை டிரில்லியன் டாலர் பொருளாதாரம் கொண்ட மாநிலமாக மாற்றுவதே எங்களது திட்டம்.  மாற்றுத்திறனாளி ஒருவரை சட்டமன்ற தேர்தலில் வேட்பாளராக நிறுத்துவோம் என கூறியுள்ளார்.

Exit mobile version