கமல்ஹாசனின் சுற்றுப்பயணம் தமிழகத்தில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது-அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

மக்கள் நீதிமய்ய தலைவர் கமல்ஹாசனின் சுற்றுப்பயணம் தமிழகத்தில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்

சென்னையில் அமைச்சர் ஜெயக்குமார் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பெண்களுக்கு முக்கியத்துவம்
சட்டசபை தேர்தலில் பெண்களுக்கு அதிமுக்கியத்துவம் கொடுக்கப்படும். பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டுக்கு உத்தரவிட்டது ஜெயலலிதா ஆட்சிதான். முழுமையான மதிப்பீடு செய்துள்ளதால் சேதமடைந்த அனைத்து சாலைகளும் விரைவில் சீரமைக்கப்படும்.

தாக்கம் ஏற்படாது
தன் உயிரை பொருட்படுத்தாமல், மக்களோடு மக்களாக இருப்பவரே தலைவர். 8 மாதங்களாக வெளியே வராத ஸ்டாலின், தற்போது ஓட்டுக்காக களம் இறங்கியுள்ளார். கமல்ஹாசனின் சுற்றுப்பயணம் தமிழகத்தில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. இவ்வாறு அவர் கூறினார்.

Exit mobile version