சட்டசபை தேர்தல் தொடர்பாக கமல்ஹாசன், தனது மக்கள்நீதிமய்ய நிர்வாகிககளுடன் ஆலோசனை நடத்தினார்.
சட்டசபை தேர்தல்
தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக ஜெயலலிதா, கருணாநிதி என்ற இரு பெரும் ஆளுமைகளுடன் தேர்தலை சந்தித்து வந்த தமிழகம் முதன்முறையாக, இவர்கள் இருவரும் இல்லாமல் தேர்தலை சந்திக்கிறது. இதன்காரணமாகவே தமிழக அரசியல் மீது ஒட்டுமொத்த தேசத்தின்ta கவனமும் திரும்பியுள்ளது.
இந்த தேர்தலில் புதிய கட்சியாக கமல்ஹாசனின் மக்கள்நீதிமய்யம் களமிறங்க உள்ளது. ஏற்கனவே நாடாளுமன்ற தேர்தலி்ல் போட்டியிட்டு எந்த இடங்ளிலும் வெற்றிபெறாவிட்டாலும், மக்கள்நீதிமய்யத்திற்கு ஓரளவு வாக்குகள் கிடைத்தது.
கமல்ஹாசன் ஆலோசனை, இந்த சூழலில், கமல்ஹாசன் சட்டசபை தேர்தலுக்கான பணியில் இறங்கியுள்ளார். இதன் தொடக்கமாக, சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் கமல்ஹாசன் இன்று கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள், கடலூர், மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, விருதுநகர் மாவட்ட நிர்வாகிகள், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.
100 தொகுதி நிர்வாகிகள்
இன்று காலை, பிற்பகல், மாலை என மூன்று கட்டமாக 100 தொகுதிகளின் நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் ஆலோசிக்க உள்ளார். சட்டசபை தொகுதிவாரியாக மக்கள் நீதி மய்யத்தின் வளர்ச்சி குறித்து நிர்வாகிகளிடம் கமல்ஹாசன் கேட்டறிந்தார்.
மேலும், சட்டசபை தேர்தலில் நாடாளுமன்ற தேர்தலை போல தனித்து போட்டியிடுவதா?அல்லது கூட்டணி அமைக்கலாமா? என தீவிரமாக ஆலோசனை நடத்தினார். நிர்வாகிகளுடைய ஆலோசனைகளையும் தீவிரமாக கேட்டறிந்தார்.