மக்கள் நீதி மய்யத்துக்கு மீண்டும் டார்ச் லைட் சின்னம்!

வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட தமிழகத்திலும் மக்கள் நீதி மய்யத்துக்கு டார்ச் லைட் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தலில்போது கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு டார்ச் லைட் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. தேர்தலில் பல இடங்களில் மக்கள் நீதி மய்யம் மூன்றாவது இடத்தைக் கைப்பற்றியது. தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலிலும் தங்களுக்கு டார்ச் லைட் சின்னத்தை ஒதுக்க வேண்டுமென மக்கள் நீதி மய்யம் கோரிக்கை வைத்தது.


அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் கடந்த டிசம்பர் மாதம் சின்னம் ஒதுக்கியது. புதுச்சேரியில் மட்டும் மக்கள் நீதி மய்யத்துக்கு டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டது. தமிழகத்தில் அந்த சின்னம் எம்.ஜி.ஆர் மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது.


இதனால் தமிழகத்திலும் தங்களுக்கு டார்ச் லைட் சின்னம் ஒதுக்கக் கோரி தேர்தல் ஆணையத்துக்கு மக்கள் நீதி மய்யம் கடிதம் எழுதியது. அத்துடன், சின்னம் கோரி உயர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தது. இதனிடையே தங்களுக்கு டார்ச் லைட் சின்னம் வேண்டாம் என எம்.ஜி.ஆர் மக்கள் கட்சியும் அறிவித்தது.


இந்த நிலையில் மக்கள் நீதி மய்யத்துக்கு மீண்டும் டார்ச் லைட் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டரில், மக்கள் நீதி மய்யத்திற்கு மீண்டும் டார்ச் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். ஒடுக்கப்பட்டோர் வாழ்வில் ஒளிபாய்ச்ச போராடிய மார்ட்டின் லூதர் கிங்கின் பிறந்தநாளில் இது நிகழ்ந்திருக்கிறது. இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கும், எம்மோடு துணை நின்றவர்களுக்கும் நன்றி. ஒளி பரவட்டும் என்று தெரிவித்துள்ளார்.

read more: அஞ்சல் அலுவலக தேர்வுகளை தமிழிலும் எழுதலாம் – மத்திய அரசு அறிவிப்பு
அத்துடன் நிர்வாகிகளுடன் நின்றபடியே 234 தொகுதிகளிலும் மக்கள் நீதி மய்யத்துக்கு டார்ச் லைட் சின்னம் கிடைத்திருப்பதாக மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

Exit mobile version