கன்னியாகுமரி எம்.பி. விஜய் வசந்திற்கு இந்த நிலையா?… அதிர்ச்சியில் காங்கிரஸ் தொண்டர்கள்!

தந்தை வசந்த குமாரின் மறைவைத் தொடர்ந்து, கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட விஜய் வசந்த் ஒரு லட்சத்து 37 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். எம்.பி.யாக பதவியேற்றது முதலே கன்னியாகுமரியில் தொகுதியில் தொடர் ஆய்வுகளை மேற்கொண்டு, பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். கடந்த சில நாட்களாகவே குமரியில் பெய்து வரும் கனமழையால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தி தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்பு வீடுகள், விவசாய நிலங்களுக்குள் புகுந்து பலத்த சேதங்கங்களை ஏற்படுத்தியது.

இதையடுத்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்த விஜய் வசந்த் விஜய் வசந்த் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். இந்நிலையில் எம்.பி. வசந்தகுமாரின் ட்விட்டர் உட்பட அனைத்து சமூக வலைத்தள பக்கங்களும் மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டுள்ள சம்பவம் காங்கிரஸ் கட்சியினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

விஜய் வசந்திற்கு நேற்று வாட்ஸ் அப் மூலம் வந்த குறுச்செய்தியில் சமூக வலைத்தளமான ட்விட்டரில் உண்மைப்புறம்பான பதிவை நீக்குவதற்கு வெரிபிகேஷன் செய்ய வேண்டும், அதற்காக ஓடிடி எண்ணை கூற வேண்டும் என லிங்க் ஒன்று வந்துள்ளது. அதனை அவர் தொட்ட போது உடனடியாக அவருடைய ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து விஜய் வசந்த் உடைய முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களையும் மர்ம நபர்கள் முடக்கியுள்ளனர்.

சைபர் க்ரைம் போலீசாரிடம் இதுகுறித்து புகார் அளிக்க உள்ள விஜய் வசந்த், தன்னுடைய சமூக வலைத்தள பக்கங்களைப் பயன்படுத்தி யாராவது தவறான தகவல்களைப் பரப்பினால் நம்ப வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார்.

Exit mobile version